November 09, 2008

காதல் புரிவதில் இத்தனை ஆனந்தமா!

காதல் புரிவதில் இத்தனை ஆனந்தமா!

வாய்க்காத வரைக்கும் காதல் காய்க்காத மரமே!
வாய்த்து விட்டால் வானம் கூட வசப்படுமே!!
பட்டாம்பூச்சிகள் மனதில் பறக்குது தினமே! - காதலில்
படபடப்பும் பதைபதைப்பும் ஏனோ மனமே!!!

September 02, 2008

சுமந்திடுவேன் நீ சுமையானாலும்!


ஐந்துக்கே எழும்பும் அவசரம் வேண்டாம்!
ஆறின் பின்பும் உன் அணைப்பு வேண்டும்!
கோலம் என்ற ஓர் அலங்கோலம் வேண்டாம்!
கொள்ளை கொள்ளும் உன் அழகே போதும்!
கோவில் செல்லும் கொடுமை வேண்டாம்!
கொள்கையொன்றே நிலையாய் போதும்!
கடவுள் தொழுகை ஒருபோதும் வேண்டாம்!
காலம் முழுதும் உன் காதலே வேண்டும்!

August 29, 2008

நீ வா... நீ வா...


புல்மேல் விழும்
பனித்துளியாய் மாறிடுவேன்!
பட்டுச் சிதறும்
பகலவனாய் நீ வா!!.

புழுதியில் புரளும்
புழுவாய் மாறிடுவேன்!
பிடித்துப் போக
பருந்தாய்
பறந்து நீ வா!!.

சாக்கடையில் சங்கமிக்கும்
சகதியாய் மாறிடுவேன்!
தூர்வாரி தூய்மை

படுத்திவிட நீ
வா!!.




August 26, 2008

கொள்(ளை) அழகே!

ஆணவம் கொள் - எந்த ஆணுக்கும் உன்பால்
ஆசை வருவதால்!

கர்வம் கொள் - கடவுளுக்கும் உன்மேல்
காதல் வருவதால்!

அகங்காரம் கொள் - அழகு என்ற சொல் உன்னால்
அர்த்தம் கொண்டதால்!

திமிர் கொள் - தித்திக்கும் பேரழகி உன்போல்
தரணியில் பெண் இல்லாததால்!.

எந்த பெண்ணும் கொள்ளாத அழகை
கொள்ளையிடும் அழகை கொண்டதற்காய் - நீ

யாரும் கொள்ளக்கூடாத இப்பண்புகளை
தயவுசெய்து கொள் பெண்ணே !!!