November 23, 2009

வாரம் ஒன்று வாழ்ந்து கண்டேன்...

தவங்கள் எதுவும் செய்ததில்லை - ஆனாலும்

வரங்கள் பல வாரித்தந்தான் அவன் - அவ்

வரமே ஒன்று... வந்தது இன்று...

வண்ணமான் போன்று உருவம் கொண்டு...

வருடம் பல நான் வாழ்ந்ததுண்டு...

வாழ்க்கை என்று நம்பிக் கொண்டு...

வாரம் ஒன்று வாழ்ந்து கண்டேன்...

வாழ்வில் இன்பம் பெண்தான் என்று...

November 19, 2009

இரு தினங்களில்...

இரு மனங்கள் இணைந்ததென்னவோ
இரு தினங்களில்தான்! - ஆனாலும்
இரு யுகங்கள் வாழந்தாற்போல்
இன்பம் மேலிடுகிறதே இருவருக்கும்!!.
இதுதான் காதல் என்பதோ?...

மூன்றாம் நாளில்...

மரணம் அடையாத என் மனதிற்கும்
மலர் வளையம் வைத்து விடுவாயோ!
முதல் நாளில் என் பேச்சை நிறுத்தினாய்!!
மூன்றாம் நாளில் எங்கே என்
மூச்சையே நிறுத்திடுவாயோ? - என்னை
மொத்தமாக முடித்து விடும் முடிவோடு நீ!.

நாலாம் நாளிலும்...

கொஞ்சம் பேசலாமென எண்ணினேன்! - அவள்
கொஞ்சும் பேச்சில் கொள்ளை போனேன்!!.
கொடியசைந்திருந்தால் கூட இன்னும்
கொஞ்சம் கொடூரமாய்த்தான் கேட்டிருக்கும்!
நாணலவள் நாணம் கொள்ளும் ஓசையிலோ
நாலாம் நாளிலும் நான் எனை மறந்தேன்!!.

November 17, 2009

ஒரே நாளில்...

துயில் கொள்ளாமல் துள்ளிக் கொண்டிருக்கிறது
- என் நெஞ்சம்!.

தூக்கம் கெடுக்க, ஏக்கம் கொடுக்க வந்தவளே!

ஒரே நாளில் ஓராயிரம் மாற்றம் என்னில்!! - இன்னும்

ஓரிரு நாளில் ஒரேயடியாய் ஒழித்து விடுவாயோ என்னை!

November 16, 2009

என்னுள் உன்னைத் தொலைத்திடு!

என்னுள் உன்னைத் தொலைத்திடு -
எங்கே தொலைத்தாய் கண்டுபிடித்திடு!

காதலை மழையாய் என்மேல் பொழிந்திடு -
முத்த மழையால் என்னுடல் நனைத்திடு!

பலபொழுது செல்லமாக கடிந்திடு -
ஏன் சிலபொழுது ஒரு கடி கூட கடித்திடு !

குவளைமலர் தண்டுகள் கோபம்!!


குவளைமலர் தண்டுகள் கோபத்தில் கொப்பளித்தன...

இவள் விரல் மென்மை கண்டு... தன்னழகு பறிபோனதென்று...

ரோஜா -இதழ்கள் விரிப்பதை இழுக்காய் எண்ணிற்று...

என்னவள் இதழ்கள் விரிக்க... பூத்து நின்ற புன்னகை கண்டு...

மல்லிகையும் முல்லையும் முனகத் தொடங்கிற்று...

மலர்வாசம் இவள் கூந்தலில் எப்படி வந்ததென்று...