January 06, 2009

அனுமதிக்க மாட்டேன்!

அவசரக்குளியலை
அனுமதிக்க மாட்டேன்!
அதிகாலை உன்னழகு
அதிவிரைவில் கலைவதால்!!

சரிவர செய்திடும்
சமையல் ருசியேன்!
சலித்துக்கொள்ள
சந்தர்ப்பம் கொடாததால்!!

எதையும் சகித்துக்கொள்ள
உன்னை பணியமாட்டேன்!
உன் சினம் கூட என்னை
சிலிர்க்க வைப்பதால்!