August 29, 2008

நீ வா... நீ வா...


புல்மேல் விழும்
பனித்துளியாய் மாறிடுவேன்!
பட்டுச் சிதறும்
பகலவனாய் நீ வா!!.

புழுதியில் புரளும்
புழுவாய் மாறிடுவேன்!
பிடித்துப் போக
பருந்தாய்
பறந்து நீ வா!!.

சாக்கடையில் சங்கமிக்கும்
சகதியாய் மாறிடுவேன்!
தூர்வாரி தூய்மை

படுத்திவிட நீ
வா!!.




August 26, 2008

கொள்(ளை) அழகே!

ஆணவம் கொள் - எந்த ஆணுக்கும் உன்பால்
ஆசை வருவதால்!

கர்வம் கொள் - கடவுளுக்கும் உன்மேல்
காதல் வருவதால்!

அகங்காரம் கொள் - அழகு என்ற சொல் உன்னால்
அர்த்தம் கொண்டதால்!

திமிர் கொள் - தித்திக்கும் பேரழகி உன்போல்
தரணியில் பெண் இல்லாததால்!.

எந்த பெண்ணும் கொள்ளாத அழகை
கொள்ளையிடும் அழகை கொண்டதற்காய் - நீ

யாரும் கொள்ளக்கூடாத இப்பண்புகளை
தயவுசெய்து கொள் பெண்ணே !!!