March 24, 2012
இதுவரை நீ... இநீ
மணிக்கணக்கில் மடிந்து கிடக்கும் கணினிக்கிறுக்கன் நீ - சில
மணித்துளிகள் மங்கையோடும் களித்திடு இனி!
மடையன் போல் மன ஓட்டங்களோடு வலம் வரும் நீ
மயங்கிடு இவள் மடிதனில் முழு மனதோடு இனி!
பலசமயம் பளிச்சென்று சிரிக்கும் 'பல்லழகன்' நீ!
பாவை இவள் வந்துவிட்டாள் பத்திரம் இனி!!
பட்டங்கள் பலபெற்றும் பலனில்லை என்றாய் நீ!
பள்ளியறையில் இதுவரை படிக்காத பாடம் இனி!!
கன்னியரை கண்களாலே களவாடும் கயவன் நீ - உன்
கண்மணி இவளை கண்போல் காத்திடு இனி!
கணினியோடு காலம் கடத்தினாய் செல்வா நீ - இவள்
கனிவும் காதலுமே காலம் முழுதும் செல்வம் இனி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment